தர்மபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியைச் சார்ந்தவர் ஜெயபாண்டியன். இவர் தன்னை விஞ்ஞானி எனச் சொல்லிக்கொண்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பிராஜக்ட் செய்துகொடுத்தும் மற்ற நேரங்களில் பெயிண்டிங் வேலைசெய்தும் வருகிறார்.
இவர் சில வாரங்களுக்கு முன்பு தனியாக யூ-ட்யூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை தான் நிரூபிக்கப் போவதாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தக் காணொலி குறித்து தர்மபுரி தேர்தல் வட்டாட்சியர் தேன்மொழி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஜெயபாண்டியன் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்துு கைதுசெய்தனர்.
மேலும் அவரிடமிருந்து போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: யூ-ட்யூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்...!