தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மூங்கில் மடுவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் தனது விவசாய நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பென்னாகரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜிடம் சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதற்கு கோவிந்தாரஜ் மறுப்பு தெரிவித்ததால் சார்பதிவாளர் பத்திரம் வழங்குவதற்கு காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தாரஜ் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக லட்சுமிகாந்தனிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்த சிலரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோவிந்தராஜ் கூறுகையில், "பென்னாகரம் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சம் தராமல் ஒரு அடி நிலம்கூட பதிவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் அடாவடியால் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்." என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை பணிநீக்கம் செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதையும் படிங்க:
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் மேற்படிப்பில் ஆர்வம் காட்டும் சிங்கப் பெண்!