ETV Bharat / state

பிளாஸ்டிக் குப்பைக்கு வெள்ளி நாணயம் வழங்கிய பசுமை தாயகம் அமைப்பினர்..! - தருமபுரி பிளாஸ்டிக் குப்பைகள் ஒழிப்பு

தருமபுரி: இரண்டு கிலோ பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வந்த கொடுத்த பொதுமக்களுக்கு பசுமை தாயகம் அமைப்பினர் ஒரு கிராம் வெள்ளி நாணயமும், ஒரு கிலோ அரிசியும் வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

வெள்ளி நாணயம்
author img

By

Published : Nov 18, 2019, 1:41 AM IST

தருமபுரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவான பசுமைத் தாயகம் அமைப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்திவருகிறது.

இந்த அமைப்பினர் கடந்த வாரம் தருமபுரி டவுன் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இரண்டு கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் கொடுத்தால் ஒரு கிலோ தரமான அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் மாநில துணை அமைப்பாளர் மாது, கம்பை, நல்லூர், கடத்தூர் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு அரிசியினை வழங்கினார்.

pasumai-thaayagam-offered-free-silver-coins-for-plastic-wastage-at-dharmapuri
பிளாஸ்டிக் குப்பைக்கு வெள்ளி நாணயம் வழங்கும் பசுமை தாயகம் அமைப்பினர்

இதேபோல் அதிக அளவில் கிராமமக்கள் ஒன்று கூடும் இடமான நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில், பிளாஸ்டிக் குப்பைகள் இரண்டு கிலோ கொடுத்தால் ஒரு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாமை நடத்தினர்.

இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் வீடுகளில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வெள்ளி நாணயத்தையும், அரிசியையும் பெற்றுச்சென்றனர்.

பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கி கொண்டு வெள்ளி நாணயம் வழங்கும் பசுமை தாயகம் அமைப்பினர்

இதையும் படியுங்க: பிளாஸ்டிக் கழிவுகளுக்கு குட்- பை சொல்லும் சிங்கப் பெண்கள்..!

Intro:பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிராம் வெள்ளி நாணயம் வழங்கி பிளாஸ்டிக் விழிப்புணர்வு.

Body:பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிராம் வெள்ளி நாணயம் வழங்கி பிளாஸ்டிக் விழிப்புணர்வு.

Conclusion:பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிராம் வெள்ளி நாணயம் வழங்கி பிளாஸ்டிக் விழிப்புணர்வு. ஏற்படுத்திய பசுமைத் தாயகம் அமைப்பு. பசுமைத் தாயகம்  தருமபுரி மாவட்ட அமைப்பின் சார்பாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் கடந்த வாரம் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இரண்டு கிலோ பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் ஒரு கிலோ தரமான அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  பொதுமக்கள்  வீடுகளில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவந்து  முகாமில் வழங்கி அரிசி பெற்றுச் சென்றனர் .பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில துணை அமைப்பாளர் மாது இத்திட்டத்தை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் கிராமப்புற மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த வாரம் கம்பைநல்லூர் பகுதிகளிலும் நேற்று கடத்தூர் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுக்கொண்டு அரிசி வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நல்லம்பள்ளி தாலுகா பகுதிகளில் அதிக அளவில் கிராம மக்கள் ஒன்று கூடும் இடமான நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் இன்று பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் குப்பை 2 கிலோ கொடுத்தால் ஒரு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் ஒரு கிலோ அரிசி முகாமை அமைத்தனர். முகாமை முன்னாள் தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளருமான வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார். முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்து கொடுத்துவிட்டு வெள்ளி நாணயத்தையும் அரிசியையும் பெற்றுச் வெளி நாணயத்தையும் அரிசியையும் பெற்றுச்சென்றனர். பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் விவசாயிகள் போன்றோரிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவத்த உள்ளதாக அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.