தருமபுரி மாவட்டத்தில் மேடை கலைஞா்கள் சார்பில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கரோனா ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இசைக் கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் புகழ் பெற்ற தருமபுரியைச் சேர்ந்த மூக்குத்தி முருகன், எஸ்பிபி போன்ற குரல் வளம் கொண்ட ஞானசேகரன் ஆகியோர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை பாடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, கரோனா காலத்தில் போதிய வருவாய் இல்லாமல் தவித்து வந்த இசைக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிவாரண நிதியுதவிகளை வழங்கினார்.