ETV Bharat / state

முதலமைச்சர் நிகழ்ச்சியின் ஆயத்தப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் - கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்

தருமபுரி: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கலந்துகொள்வுள்ள நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

minister k.p anbalagan inspect chief ministers program works in dharumapuri

author img

By

Published : Aug 19, 2020, 7:05 PM IST

தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக்கூட்டம் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

இதன்தொடர்ச்சியாக முதலமைச்சர் நாளை (ஆகஸ்ட் 20) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

நாளை மாலை தருமபுரி மாவட்டத்திற்க்கு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

இதைதொடர்ந்து மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ிந்நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளை தமிழ்நாடு உயா்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மலர்விழி, காவல் கண்காணிப்பாளா் ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.