ETV Bharat / state

காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்! - Dharmapuri Police Station

தருமபுரி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கில் மூன்றாம் இடம் பிடித்த தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் சென்று காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

police
police
author img

By

Published : Jan 27, 2020, 8:15 AM IST

தமிழ்நாடு முழுவதும் செயல்படும் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டதில், சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்கள் பட்டியலில் தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதனை பாராட்டும் வகையில் குடியரசு தினவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி காவல் நிலையத்திற்கு கோப்பை வழங்கினார்.

தருமபுரி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வளாராகப் பணியாற்றி வருபவர் ரத்தினகுமார். இவர் இங்கு பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என அனைத்து வழக்குகளிலும் துரிதமாகச் செயல்பட்டு விரைவில் தீர்வு காணக்கூடிய ஒரு ஆய்வாளராகத் திகழ்ந்து வருகிறார்.

தருமபுரி காவல் நிலையத்திற்கு அமைச்சர் நேரில் சென்று பாராட்டு

இதனிடையே, தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு வாழ்த்து தெரிவிக்க, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு நேரில் சென்று, ஆய்வாளர் ரத்தினகுமார் மற்றும் அவருடன் பணிபுரியும் சக காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் காவல் நிலையத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் களைகட்டிய குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்!

Intro:தமிழ்நாட்டில் மூன்றாம் இடம் பிடித்த தருமபுரி நகர காவல் நிலையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்துBody:தமிழ்நாட்டில் மூன்றாம் இடம் பிடித்த தருமபுரி நகர காவல் நிலையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்துConclusion:தமிழ்நாட்டில் மூன்றாம் இடம் பிடித்த தருமபுரி நகர காவல் நிலையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சென்று காவல் துறையினருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தருமபுரி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வளாரக பணியாற்றி வருபவர் ரத்தினகுமார். இவர் இந்த காவல் நிலையத்துக்கு பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என அனைத்து வழக்குகளிலும் துப்பறிந்து விரைவில் கண்டறிந்து தீர்வு காணக்கூடிய ஒரு ஆய்வாளராக திகழ்ந்து விளங்குகிறார். தமிழகம் முழுவதும் செயல்படும் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டதில் சிறப்பாக செயல்படும் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து குடியரசு தினவிழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவல்நிலையத்திற்கு கோப்பை வழங்கினார்.மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு
இவருக்கு வாழ்த்து தெரிவிக்க இரவும்பாராமல் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு நேரில் சென்ற அவர் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் மற்றும் அவருடன் பணிபுரிந்த காவல்துறையினருக்கு இனிப்புகள் வழங்கி, பாராட்டுக்கள் தெரிவித்த அவர் காவல் நிலையத்தில் உள்ள அம்சங்கள் குறித்து நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;
மாவட்டத்தில் இயங்கி வரும் தருமபுரி நகர காவல் நிலையம் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக மூன்றாம் இடம் பிடித்து, தமிழக முதல்வருடன் பரிசு பெற்ற காவல் ஆய்வாளருக்கும் அவருடன் பணியாற்றிய காவல் துறையினருக்கும் உயர் கல்வித்துறை மற்றும் மாவட்ட மக்களின் சார்பாக அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.