தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “ அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ஜூனியர் விகடன் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பேராசிரியர் நியமனத்தில் அமைச்சர் கையூட்டு பெற்றுக்கொண்டு பேராசிரியர்களை நியமித்ததாக தெரிவித்து அது செய்தியாகவும் வெளியாகிருக்கிறது.
பாலகுருசாமி துணைவேந்தராக பணியாற்றியவர். பேராசிரியர் நியமனத்தில் அரசின் பங்கும் அமைச்சரின் பங்கும் ஏதுமில்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் அரசுக்கும் அமைச்சருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்தோடு அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதன் உண்மைத்தன்மை அறியாமல் அந்த இதழும் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, உண்மைக்கு புறம்பான பொய்யான தகவலை பரப்பி அரசுக்கும் அமைச்சருக்கும் கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், பாலகுருசாமி, ஜூனியர் விகடன் செய்தியாளர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளேன் “ என்றார்.
இதையும் படிங்க: ’பிரேமலதா எங்கள் ஊர் மருமகள்’ - அமைச்சர் செல்லூர் ராஜூ