ETV Bharat / state

'நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் புகார் அளிக்கலாம்' - சென்னை மண்டல பொறியாளர் உறுதி - நீர்வழி பாதை

தருமபுரி: நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பொது மக்கள் புகாரளிக்கலாம் என சென்னை மண்டல முதன்மை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.

முதன்மை பொறியாளர் அசோகன்
author img

By

Published : Oct 7, 2019, 11:01 PM IST

தமிழ்நாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் நோக்கில் கடந்த 3 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில், நீர் மேலாண்மை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மண்டல முதன்மை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நீர் மேலாண்மை திட்ட பணிகள் மற்றும் முதலமைச்சரின் குடிமராமத்துப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

348 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோகத்தூர் ஏரியை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அசோகன் பேசுகையில், "முதலமைச்சரின் ஆணைப்படி கடந்த 3 ஆண்டுகளாக மழைநீரைச் சேகரிக்கும் நோக்கில், நீர் மேலாண்மை திட்டப் பணிகளும், குடிமராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் 10 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ. 4 கோடியே 96 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

ஆய்வு
சென்னை மண்டல முதன்மை பொறியாளர் அசோகன் ஆய்வு

இந்தப் பணிகள் முடிவடைதன் மூலம் எதிர்வரும் பருவமழையின் போது, மழைநீர் வீணாகாமல் ஏரிகள் மூலம் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு நீர்நிலைகளை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏரிகளின் கரைகளை வலிமையாக்க புல் தரைகள் அமைக்கப்படும். தேவை ஏற்பட்டால் இந்த ஏரிகளில் மரக்கன்றுகளை நடவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்” என்றார்.

இதையும் படிக்கலாமே: நீரோடையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு - பொதுமக்கள் குற்றச்சாட்டு

Intro:மழைநீரை சேகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில் நீர் மேலாண்மை திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மண்டல முதன்மை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.

இன்று தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நீர் மேலாண்மை திட்ட பணிகள் மற்றும் முதலமைச்சரின் குடி மராமத்து பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட, 348 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட சோகத்தூர் ஏரியை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அசோகன் "முதலமைச்சரின் ஆணைப்படி கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மழைநீரை சேகரிக்கும் நோக்கில் நீர் மேலாண்மை திட்ட பணிகள் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2019 20 ஆம் ஆண்டில் 10 ஏரிகளில் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ள 4 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதன் மூலம் எதிர்வரும் பருவமழையின் போது மழை நீர் வீணாகாமல் இந்த ஏரிகள் மூலம் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும் குடிமராமத்து திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏரிகளின் கரைகளை வலிமையாக்க புல் தரைகள் அமைக்கப்படும்.

தேவை ஏற்பட்டால் இந்த ஏரிகளில் மரக்கன்றுகளை நடவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். நீர்வழி பாதைகளில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அகற்றப்படும் இதுகுறித்து பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

என்றார் அசோகன்.

இந்நிகழ்வின் போது கண்காணிப்பு பொறியாளர் என். சுரேஷ், செயற்பொறியாளர் கே. மெய்யழகன், உதவி பொறியாளர்கள் வி. சாம்ராஜ், வி. வெங்கடேஷ். டி.சேது ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.Body:மழைநீரை சேகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில் நீர் மேலாண்மை திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மண்டல முதன்மை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.

இன்று தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நீர் மேலாண்மை திட்ட பணிகள் மற்றும் முதலமைச்சரின் குடி மராமத்து பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட, 348 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட சோகத்தூர் ஏரியை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அசோகன் "முதலமைச்சரின் ஆணைப்படி கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மழைநீரை சேகரிக்கும் நோக்கில் நீர் மேலாண்மை திட்ட பணிகள் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2019 20 ஆம் ஆண்டில் 10 ஏரிகளில் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ள 4 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதன் மூலம் எதிர்வரும் பருவமழையின் போது மழை நீர் வீணாகாமல் இந்த ஏரிகள் மூலம் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும் குடிமராமத்து திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏரிகளின் கரைகளை வலிமையாக்க புல் தரைகள் அமைக்கப்படும்.

தேவை ஏற்பட்டால் இந்த ஏரிகளில் மரக்கன்றுகளை நடவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். நீர்வழி பாதைகளில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அகற்றப்படும் இதுகுறித்து பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

என்றார் அசோகன்.

இந்நிகழ்வின் போது கண்காணிப்பு பொறியாளர் என். சுரேஷ், செயற்பொறியாளர் கே. மெய்யழகன், உதவி பொறியாளர்கள் வி. சாம்ராஜ், வி. வெங்கடேஷ். டி.சேது ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.Conclusion:மழைநீரை சேகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில் நீர் மேலாண்மை திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மண்டல முதன்மை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.

இன்று தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நீர் மேலாண்மை திட்ட பணிகள் மற்றும் முதலமைச்சரின் குடி மராமத்து பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட, 348 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட சோகத்தூர் ஏரியை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அசோகன் "முதலமைச்சரின் ஆணைப்படி கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மழைநீரை சேகரிக்கும் நோக்கில் நீர் மேலாண்மை திட்ட பணிகள் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2019 20 ஆம் ஆண்டில் 10 ஏரிகளில் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ள 4 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதன் மூலம் எதிர்வரும் பருவமழையின் போது மழை நீர் வீணாகாமல் இந்த ஏரிகள் மூலம் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும் குடிமராமத்து திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏரிகளின் கரைகளை வலிமையாக்க புல் தரைகள் அமைக்கப்படும்.

தேவை ஏற்பட்டால் இந்த ஏரிகளில் மரக்கன்றுகளை நடவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். நீர்வழி பாதைகளில் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அகற்றப்படும் இதுகுறித்து பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

என்றார் அசோகன்.

இந்நிகழ்வின் போது கண்காணிப்பு பொறியாளர் என். சுரேஷ், செயற்பொறியாளர் கே. மெய்யழகன், உதவி பொறியாளர்கள் வி. சாம்ராஜ், வி. வெங்கடேஷ். டி.சேது ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.