தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று (மார்ச் 11) தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முன்பு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான எஸ்.பி.கார்த்திகா தலைமையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
இந்த மனித சங்கிலியில், 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, சுமார் கலந்துகொண்டனர். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா, “கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில், பொதுமக்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் தூதுவர்களாக மாணவர்களை எண்ணுவதால் தான், மாணவர்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கவும், அச்சமில்லாமல் ஜனநாயகக் கடமையாற்றவும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என ஆட்சியர் தெரிவித்தார்.