தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர் செங்கல்பட்டில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை சென்றவர் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
![உடைக்கப்பட்ட பீரோ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-gold-theft-vis-7204444_23092019184136_2309f_1569244296_937.jpg)
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசோக் திறந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்கக் காசு, 75 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து அரூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
![மசாலா விநியோஸ்தரின் வீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-gold-theft-vis-7204444_23092019184136_2309f_1569244296_557.jpg)