ETV Bharat / state

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளி; நடவடிக்கை எடுக்குமா அரசு? - school

தருமபுரி: வத்தல்மலைப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர்.

பள்ளி
author img

By

Published : Jul 6, 2019, 2:56 PM IST

தருமபுரி மாவட்டம் வத்தல்மலை சுற்று வட்டாரப்பகுதியில் சுமார் ஏழு கிராமங்கள் உள்ளன. இம்மலைக்கிராம மக்களுக்கென கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 271 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு இப்பள்ளியையும் விட்டுவைக்கவில்லை. இப்பள்ளியில் இருக்கும் ஆழ்துளை கிணற்றிலும் குறைவான அளவே தண்ணீர் கிடைப்பதால் மாணவ, மாணவியர் குடிநீர் முதற்கொண்டு, கழிவறை பயன்பாடு வரை அனைத்துக்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளி

மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு கூட தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடி தண்ணீர், பள்ளிக்கு செல்ல ஏதுவான சாலை என அனைத்தும் இப்பள்ளிக்கும், இப்பகுதி மலை கிராம வாசிகளுக்கும் எட்டா கனியாகவே இருக்கிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:tn_dpi_01_schoolno_tolet_nowater_vis_byte_7204444

Body:tn_dpi_01_schoolno_tolet_nowater_vis_byte_7204444

Conclusion:

தருமபுரி அருகே அடிப்படை வசதி இன்றிசெயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளி. தருமபுரி மாவட்டம் வத்தல்மலை மலை கிராமத்தில் சுமார் ஏழு கிராமங்கள் உள்ளது. இக்கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு மலை கிராமத்தில் படிக்கக்கூடிய மாணவ மாணவியர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.இப்பள்ளியில் 271 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. வறட்சியின் காரணமாக இப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் நாளொன்றுக்கு 100 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதன் காரணமாக மாணவ மாணவியர் குடிநீர் பயன்பாட்டுக்கு கூட பள்ளியில் தண்ணீர் வசதி இல்லை .இப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ மாணவியர் பள்ளியில் இருந்து  தொலைவில் உள்ள கிணறுகளில் இருந்து வளிகள் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் மாணவ மாணவியர் பள்ளிக்கு அருகில் உள்ள திறந்த வெளியிலேயே தங்கள் இயற்கை உபாதை கழிக்கும் அவல நிலையில் உள்ளனர்.இப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க கூடிய மதிய உணவு பள்ளியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த சத்துணவு மையத்தில் வழங்கப்படுகிறது இதற்கு செல்லக்கூடிய பாதையும் குறுகிய பாதையாக உள்ளது.பள்ளிக்குச் செல்லும் சாலை இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பள்ளிகளுக்கு குடிநீர் கழிப்பிட வசதி சாலை வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. பள்ளிக்குச் செல்ல கூடிய மாணவியர் இயற்கை உபாதையை கழிக்க கழிப்பறை கூட இல்லாதது வேதனையின் உச்சம் . இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் இடம் கேட்ட போது வறட்சியின் காரணமாக தண்ணீர் குறைந்த அளவே கிடைக்கிறது என்றும் அரசுக்கு தண்ணீர் பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பதிலளித்தார். பள்ளிகளை கண்காணிக்கக்கூடிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இவற்றையெல்லாம் கண்காணிக்காமல் நகர்ப்புற பகுதியில் மட்டும் கவனம் செலுத்துவதும் கிராமப்புறங்கள் மற்றும் மலை கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது நியாயம கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.