தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கு சென்றுள்ளார். அந்த வகையில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளி ஆசிரியையான தமிழ்ச்செல்வியின் வகுப்பறைக்குச் சென்று முதல் பெஞ்ச்சில் அமர்ந்து, மாணவர்களுடன் பாடத்தை கவனித்தார்.
அப்போது ஆசிரியை தமிழ்ச்செல்வி, வைரமுத்து கவிதைகள் குறித்து பாடம் எடுத்துள்ளார். இதனால் ஆர்வமடைந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அந்த நேரத்திலேயே பாடலாசிரியா் வைரமுத்துவுக்கு தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதோடு உங்கள் கவிதைகளைத்தான் பாடம் எடுக்கிறார்கள் என்று கூறி, தமிழ்ச்செல்வியிடம் பேச வைத்தார்.
அப்போது வைரமுத்து ஆசிரியையிடம், இரண்டு கண்கள் போனாலும் 20 நக கண்கள் உள்ளது என்ற நம்பிக்கை வையுங்கள். எனக் கூறி அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். அதன்பின் அமைச்சா் பள்ளியில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை