ETV Bharat / state

கே.பி. அன்பழகனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு - கே.பி. அன்பழகனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்தித்துள்ளார்.

கே.பி. அன்பழகனை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Jan 23, 2022, 10:09 AM IST

தர்மபுரி: காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி 20ஆம் தேதி அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இவருக்கு ஆதரவாக வந்து சந்தித்து சென்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை கெரகோடஹள்ளியிலுள்ள கே.பி. அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் தனியாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.

கே.பி. அன்பழகனை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி வருகையின்போது முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, முல்லைவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 6 ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.