தர்மபுரி: அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக சுமார் 86 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நிலத்தில் வீடற்ற ஏழைகள் வசித்து வந்தனர். சில வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை வாங்கிய கோபு என்பவர், தனது பண செல்வாக்கை பயன்படுத்தி கோயில் நிலத்தை தனது தந்தையின் பெயரில் பட்டா போட்டுள்ளார்.
மேலும், கோயில் நிலத்தில் இருப்பவர்களிடம் கொஞ்சம் பணம் செலவு செய்தால் உங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஊர் பொதுமக்கள், இது கோயில் சொத்து என்று கூறியுள்ளனர்; சந்தேகமடைந்த கோயில் நிர்வாகிகள் கோயில் நிலம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
இதில் 1905ஆம் ஆண்டு குமரன் ராமசாமி என்ற பெயரில் பட்டா இருந்துள்ளது. குமரன் என்ற பெயர் தனது தந்தையின் பெயர் என கூறி 2005-இல் கோபு பட்டா பெற்றுள்ளார். ஆனால், அவரது தந்தை குமரன் பிறந்தது 1927ஆம் ஆண்டு.
சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு, கோயில் வசம் ஒப்படைக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: