ETV Bharat / state

புதிய சாலையின் தரத்தை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர்! - Collector karthika

தருமபுரி: பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரத்தை ஆய்வுசெய்யும் வகையில், சாலையின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆய்வுசெய்தார்.

பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்  மாவட்ட ஆட்சியர் கார்த்திகா  Pradhan Mantri Gram Sadak Yojana  Collector karthika measured the Pradhan Mantri Gram Sadak Yojana Road  Collector karthika  பிரதம மந்திரி கிராம சாலையை அளவீடு செய்த மாவட்ட ஆட்சியர்
Collector karthika measured the Pradhan Mantri Gram Sadak Yojana Road
author img

By

Published : Dec 10, 2020, 11:59 AM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மூக்காரெட்டிபட்டி, அதிகாரபட்டி பகுதியில் பிரதம மந்திரி கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 10 கோடி ரூபாய் மதிப்பில் 2.4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுவரும் தார்ச்சாலையில் பல்வேறு இடங்களில் சிறுபாலம், கல்வெட்டுகள், தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

இந்தச் சாலைப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா திடீரென நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது, மூக்காரெட்டிப்பட்டி முதல் காந்தி நகர் வரை அமைக்கப்பட்டுள்ள சாலையை ஆய்வுசெய்தார். தொடர்ந்து சாலை அமைக்க எவ்வளவு ஜல்லி கற்கள், மண் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

திடீரென சாலையை வெட்டி எடுக்கச் சொல்லி அளவுகோல் மூலம் அளவீடு செய்தார். தொடர்ந்து எவ்வளவு ஜல்லி கற்கள், மண் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சல்லடை மூலம் சலித்து, ஜல்லிக் கற்களைத் தரம்பிரித்து அளவீடு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஜல்லி கற்களைத் தரம்பிரித்தும், மண்ணையும் எடை தளம் கொண்டு அளவீடு செய்து, எவ்வளவு எடை இருக்கின்றன எனக் கணக்கீடு செய்துபார்த்தார். இதைத் தொடர்ந்து, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறு பாலங்களை, டேப் மூலம் இடைவெளிகள் சரியாக இருக்கின்றனவா என அளவீடு செய்தார்.

மேலும் பிரதமர் கிராமச் சாலைத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகளை அணு அணுவாக, ஜல்லி கற்கள், மண் என துல்லியமாக மாவட்ட ஆட்சியர் அளவீடு செய்தது கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சாலையை வெட்டி தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.