தருமபுரி: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக பல இடங்களில் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான அத்துமீறல்கள் எவை என்பதைப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நாடகங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு அறிவுறுத்திவருகிறது.
மாணவிகளுக்கு விழிப்புணர்வு
இந்த நிலையில், தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மூன்றாயிரத்து 500 மாணவிகள் பயின்றுவருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு good touch, bad touch குறித்தும், பாலியல் தொந்தரவு, வேறுவிதமான தொந்தரவுகள் ஏற்பட்டால் அவர்கள் பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர், மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கும் வகையில் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
நிமிர்ந்து நில், துணிந்து சொல்
மாணவிகளின் புத்தக அட்டைகளில் நிமிர்ந்து நில், துணிந்து சொல் என்ற வாசகம் அடங்கிய துண்டுச்சீட்டு, அனைத்து பாடப்புத்தகங்களிலும் விழிப்புணர்வு, புகார் எண் சீல்வைக்கப்படுகிறது. ரப்பா்ஸ்டாம் சீலில் குழந்தைகள் உதவி என்பது 1098, மாவட்ட ஆட்சியரின் உதவி எண் 1077, மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்அப் எண் 8903891077 மற்றும் கல்வி வழிகாட்டி மையம் 14417 உள்ளிட்ட நான்கு தொலைபேசி எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலயே முதன் முறையாகத் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் பாடப்புத்தகங்களில் விழிப்புணர்வு, புகார் எண்கள் சீல் குத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றுகள் - ஸ்டாலின் கோரிக்கை