தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சார்பில் 9 சமுதாயக் கூடங்கள், 13 பள்ளி கட்டடங்கள், கால்நடை மருந்தகம், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, அறிவியல் ஆய்வகம், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் என ரூ.69 கோடியே 89 லட்சம் மதிப்பில் 117 புதிய கட்டுமான பணிகளை தொடக்கி வைத்தார்.
மேலும், ஊரக வளர்ச்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட ஏழு துறைகளில் ரூ. 15 கோடியே 961லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 20 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தோட்டக்கலை துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், 13 ஆயிரத்து 999 பயனாளிகளுக்கு ரூ.85 கோடியே 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, சார் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் - நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
தருமபுரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.