தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டி பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் சிவக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் அவர் சென்ற இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் சாம்பலானது.
இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் சிவக்குமாரை ஆம்புலன்லஸ் மூலம் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவுச் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.