தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலானது ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறவுள்ளதால், தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு உறுதி செய்யும் வகையில், பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாமானது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கார்த்திகா தொடங்கிவைத்தார். முகாமில் தர்மபுரி சாராட்சியர் பிரதாப் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த செய்முறையை விளக்கினார்.
மேலும் பொதுமக்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்து வாக்குப்பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டையும் பார்த்து சென்றனர். குறிப்பாக முதல்முறையாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினர் மற்றும் முதியோர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: தேர்தல் விதி மீறல்: பல்வேறு கட்சியினர் மீது வழக்கு!