ETV Bharat / state

ஆடி மாத விவசாயப் பணிகள் தொடக்கம்! - விவசாயம்

தருமபுரி: மேட்டுப்பாங்கான நிலப்பரப்பில் விவசாயிகள் ஆடி மாதத்தில் விட்டுவிட்டு பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி தங்கள் நிலங்களை சமன்படுத்தி ஆடி மாத பயிர்களுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

agriculture
author img

By

Published : Jul 24, 2019, 6:09 PM IST

தருமபுரி மாவட்ட விவசாயிகள்ஆடி மாத பயிர்களுக்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளனர். ”ஆடிப்பட்டம் தேடிவிதை” என்பது பழமொழி. ஆடி மாதம் தானிய விதைப்புக்கு ஏற்ற மாதம். இம்மாதங்களில் பெய்யும் மழைநீரைக் கொண்டு விவசாயிகள் மேட்டு நிலங்களில் தானியங்களை விதைத்து அறுவடை செய்வது வழக்கம்.

விவசாயம் சார்ந்த மாவட்டமான தருமபுரியில் பெரும்பான்மையான நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாக உள்ளது. மேட்டுப்பாங்கான நிலப்பரப்பில் விவசாயிகள் ஆடி மாதத்தில் விட்டுவிட்டு பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி தங்கள் நிலங்களை சமன்படுத்திவருகின்றனர். ஆடி மாதத்தில் தானியங்களை விதைத்தால் அதிக அளவு மகசூல் தரும் என்பது நம்பிக்கை.

விவசாயப்பணிகள்

பனந்தோப்பு பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலங்களை சமன்படுத்தி தானிய பயிர்களான சோளம், கேழ்வரகு, ராகி போன்றவற்றை விதைத்துவருகின்றனர். சில விவசாயிகள் பணப் பயிரான மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மாவட்டத்தில் வாரத்துக்கு இருமுறை பெய்யும் மழையை நம்பி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்ததால் தானியங்கள் நல்ல மகசூலை தரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விதைப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

Intro:tn_dpi_01_agriwork_start_vis_byte_72044444

Body:tn_dpi_01_agriwork_start_vis_byte_72044444

Conclusion:தருமபுரி மாவட்ட விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்பது பழமொழி. ஆடி மாதம் தானிய விதைப்புக்கு ஏற்ற மாதம்.இம் மாதங்களில் மழை பெய்யும் . இம்மழைநீரைக் கொண்டு விவசாயிகள் மேட்டு நிலங்களில் தானியங்களை விதைத்து அறுவடை செய்வது வழக்கம்.தருமபுரி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் மாவட்டத்தில் பெரும்பான்மையான நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாக உள்ளது.இம் மேட்டுப்பாங்கான நிலப்பரப்பில் விவசாயிகள் ஆடி மாதத்தில் விட்டுவிட்டு பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி தங்கள் நிலங்களை சமன் படுத்தி வருகின்றனர். ஆடி மாதத்தில் தானியங்களை விதைத்தால்  அதிக அளவு மகசூல் தரும் என்பது நம்பிக்கை. தருமபுரி மாவட்டம் பனந்தோப்பு பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலங்களை சமன்படுத்தி தானிய பயிர்களான சோளம் கேழ்வரகு ராகி போன்றவற்றை விதைத்து வருகின்றனர். சில விவசாயிகள் பணப் பயிரான மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்டத்தில் வாரத்துக்கு இருமுறை பெய்யும் மழையை நம்பி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டத்தில்  தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் விதைத்த தானியங்கள் நல்ல மகசூலை தரும்  என்ற நம்பிக்கையில் விவசாயிகள்  விதைப்பு பணியை தொடங்கியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.