கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினர், மதுவால் நிகழும் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு பிப்ரவரி 2ஆம் தேதி மேற்கு ராமாபுரம் மேட்டுத் தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி அமுதா என்பவரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த சுமார் 120 லிட்டர் சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவில் ஐந்து சாராய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் சாராயம் விற்பனை- காவல் துறையினரிடம் பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்