கடலூர் பகுதியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, கம்பியும்பேட்டை பகுதியில் குப்பை கிடங்கு அமைத்து கடலூர் பெருநகராட்சி சேகரித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பெருமளவு சுகாதார சீர்கேடு மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை சிறிதும் பொருட்படுத்தாமல் கடலூர் பெருநகராட்சி இருந்து வந்த நிலையில், நேற்றிரவு அந்த குப்பை கிடங்கில் பெருமளவு தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் குப்பைக்கிடங்கை சுற்றியுள்ள 5,000 மேற்பட்ட குடியிருப்புகளில் புகை மூட்டம் சூழ்ந்து அங்குள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்பட்டுள்ளது.
இதனால், கடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு, தீயணைப்பு துறை மூலம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை முழுவதும் அணைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:உரத் தட்டுப்பாடு - விவசாயிகள் வேதனை!