தமிழ்நாடு காவல் துறை மற்றும் சீருடை பணியாளர் சங்கம் சார்பில் காவல் துறை உதவி ஆய்வாளர் பணிக்கும் காவல் துறை இட ஒதுக்கீடுக்கான உதவி ஆய்வாளர் பணிக்கும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை மொத்தம் 4 ஆயிரத்து 482 நபர்கள் எழுதினர்.
கடலூர் மாவட்டம் புனித வளனார் கல்லூரி வளாகத்திலும் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதனை விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் சந்தோஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதற்கு முன்னதாக தேர்வர்கள் அனைவரையும் காவல் துறையினர் கடும் சோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தனர். அப்போது கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:
'மதுவின் பிடியில் தமிழ்நாடு' - வருத்தத்துடன் வைகோவின் வாழ்த்து!