ETV Bharat / state

கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்க கோரி ஒற்றைக்காலில் நின்ற மாணவர்கள்! - medical students protest

கடலூர்: கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

medical students protest
ஒற்றைக்காலில் நின்றபடி போராடிய மாணவர்கள்
author img

By

Published : Feb 1, 2021, 6:35 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனடிப்படையில் அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக்கூறி அக்கல்லூரி மாணவர்கள் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 55ஆவது நாள் போராட்டமாக கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஒற்றைக்காலில் நின்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் இடத்தின் அருகே உள்ள சாலையின் இருபுறமும் மாணக்கர்கள் அனைவரும் ஒற்றைக்காலில் நின்று கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ஒற்றைக்காலில் நின்றபடி போராடிய மாணவர்கள்

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறும்போது, தங்களது கட்டணத்தை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:முதலமைச்சர் அறிவிக்கட்டும்; போராட்டத்தை நிறுத்துகிறோம் - மாணவர்கள் திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.