தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து கடலூரில் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்து கொண்டிருந்த காரை, சின்ன கங்கனாகுப்பம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மறித்து சோதனையிட்டனர்.
அதில் பெங்களூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 51 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ராம் பிரசாத்திடம் விசாரிக்கையில், கடலூரை அடுத்த பெரியப்பட்டு பகுதியில் கட்டுமானப் பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக மங்களூரில் இருந்து பணம் எடுத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடமில்லை. ஒரே நாளில் 51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வு கடலூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை! - சத்யபிரதா சாகு