கடலூரில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமுமுக மாவட்ட தலைவர் சேக் தாவூத் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஹனிபா கண்டன உரையாற்றினார்.
பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பினை அரசு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும் சிறுபாண்மைச் சமூகத்தை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக் கோரியும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.
அயோத்தி வழக்கு கடந்துவந்த பாதை...!
இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.