ETV Bharat / state

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா - மனு

கடலூர்: மனு அளிக்க வந்த பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

Dharna
author img

By

Published : May 6, 2019, 11:41 PM IST

கடந்த மே 3ஆம் தேதி பண்ருட்டி அடுத்த மேல் கவரப்பட்டு பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே விளையாட்டின் போது ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் கலவரமாக மாறியது. இந்த பிரச்னை குறித்து மனு அளிக்க மேல் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு திரண்டனர். விடுதலை சிறுத்தை கட்சி மண்டல அமைப்புச் செயலாளர் திருமாறன் தலைமையில் இவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், மனு கொண்டு செல்ல ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி என கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இம்மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தர்ணா

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா

கடலூர்
மே 6,

கடந்த மே 3ஆம் தேதி பண்ருட்டி அடுத்த மேல் கவரப்பட்டு பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே விளையாட்டின் போது ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது இதனையடுத்து இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேல் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல அமைப்புச் செயலாளர் திருமாறன் தலைமையில் மனு கொண்டு வந்தனர்.

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் உள்ளே ஐந்து பேர் மட்டும் சென்று மனு கொடுத்து வாருங்கள் என கூறியுள்ளார் இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறை இருக்கின்ற வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் அம்மனுவில் கூறியதாவது; மேல்கவரப்பட்டு பகுதியை சேர்ந்த திவாகர் (22) தவசி (18)மற்றும் ஒரு சிறுவர் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் குச்சிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஏன் இந்த வழியாக செல்கிறேர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திவாகரை தாக்கியுள்ளனர் அவருடன் இருந்த தவசி மற்றும் சிறுவர் ஓடிவிட்டனர் இதில் பலத்த காயம் அடைந்த திவாகர் அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து மேல்கவரப்பட்டு பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ஆனால் போலீசார் வழக்குபதிவு செய்யாமல் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் புகார் கொடுக்க வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது ஒரு சிலரை கைது செய்துள்ளனர். எனவே இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Video send ftp
File name: TN_CDL_03_COLLECTOR_OFFICE_DARNA_7204906

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.