சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அமமுகவுடன் கூட்டணியமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான வேட்புமனுவை இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ. பிரவீன்குமாரிடம் தாக்கல்செய்தார்.
அவருடன் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ், அமமுக அமைப்புச் செயலாளர் கே.எஸ்.கே. பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் முதல் முறையாக விருத்தாசலம் தொகுதியில் தனித்துக் களம்கண்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஆயிரம் விளக்கு திமுக கோட்டை என்றால் ஏன் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுகிறார்?'