ETV Bharat / state

வகுப்பறையும் ஆன போராட்டக்களம்!

கடலூர்: அரசு கல்லூரியில் அரசு கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி நடந்து வரும் போராட்டக் களத்திலேயே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதுகலை மாணவர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.

students
students
author img

By

Published : Jan 25, 2021, 6:09 PM IST

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில், தனியார் சுயநிதி கல்லூரியை விட பல மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து, அங்கு பயிலும் 1,200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 47 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததை அடுத்து, விடுதியில் உணவு, குடிநீர், மின்சாரத் துண்டிப்பு போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இவை அத்தனைக்கும் ஈடு கொடுத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு, முதுகலை பயிலும் மருத்துவ மாணவர்கள் போராட்டக் களத்திலேயே, அவர்களுக்கு தேவையான வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் போராட்டம், மறுபுறம் வகுப்பு என ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாணவ மாணவிகள் இணைந்து செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத பல்கலைக்கழக நிர்வாகம், தற்போது போராட்ட ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குகள் தொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.

அரசு கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையுடன் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம், அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல், அவர்களின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் செயல்படுவதும், குரல்வளையை நசுக்குவதும், வழக்குகள் பதியப்படும் என மிரட்டுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வகுப்பறையும் ஆன போராட்டக்களம்!

இதனிடையே, சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ள ’சிதம்பர ரகசியம் பார்ட் 2’ என்ற சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசு தினமான நாளை சிதம்பர ரகசியம் பார்ட் 2 வெளியிடப்போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்துள்ள ஊழல், முறைகேடு பட்டியல் வெளிவரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

’சிதம்பர ரகசியம் பார்ட் 2’ சுவரொட்டியால் பரபரப்பு!

இதையும் படிங்க: மக்களிடம் குறை கேட்பதாக ஏமாற்றுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் பாண்டியராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.