கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண செல்வன். இவர் நகர் பகுதிகளில் பழனிவேல், சரண்ராஜ் உள்ளிட்ட நபர்களிடம் மாத வாடகை ரூ.23 ஆயிரம் தருவதாக கூறி, ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் ஏழு கார்களை எடுத்துச் சென்றார்.
தற்போது ஆறு மாதம் கடந்த நிலையில் கிருஷ்ண செல்வன் கார்களின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் ஏழு கார்களையும் மற்றொரு நபரிடம் அடமானம் வைத்தார்.
இது கார் உரிமையாளர் பழனிவேல் என்பவருக்கு தெரியவந்தது. அதனடிப்படையில் அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கனகேசன் தலைமையில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) துர்கா, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் விக்ரமன் ஆகியோர் தலைமறைவாக இருந்த கிருஷ்ண செல்வனை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதாச்சலம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் கிருஷ்ண செல்வனிடமிருந்து ஐந்து கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது மற்ற இரண்டு கார்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வங்கிக் கடன் மோசடி: ஊழியரிலிருந்து கார் டீலர்கள் வரை செக்