ETV Bharat / state

ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை - கூடலூர் சாலையை மறித்த யானை

நீலகிரி: கூடலுாரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்குள்ள வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்க்கொள்ளச் சென்ற மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவின் வாகனத்தை காட்டு யானை ஒன்று வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை
ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை
author img

By

Published : Dec 30, 2019, 3:59 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்குள்ள 40 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமாக காணப்படும். இதனால் இந்தப் பகுதியில் ஆய்வினை மேற்கொள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காட்டு யானை ஒன்று அவரது வாகனத்தை வழிமறித்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின் சிறிது நேரம் சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானை, அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் வாகனம், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் யானை பின் தொடர்ந்து சென்றன.

சிறிது தூரம் நடந்து சென்ற அந்த யானை, பின்னர் வாகனங்களுக்கு வழிவிட்டு ஓரமாக சென்றது. அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் சிறியூர் வாக்குசாவடிக்கு சென்று வாக்குப்பதிவை ஆய்வு செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் மாவட்ட ஆட்சியர் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.

Intro:OotyBody:உதகை 30-12-19

வாக்குசாவடிகளை ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த காட்டு யானையால் பரப்பரப்பு.

உதகை மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 216 ஊராட்சி வார்டு உறுப்பினர், 18 ஊராட்சி தலைவர், 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளுக்கான தேர்வுதல் நடைபெற்று வருகிறது. இதில் 40 வாக்குசாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் உதகை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி, சிறியூர் உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் அமைக்கபட்டுள்ள வாக்குசாவடிகளை ஆய்வு செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா இன்று காலை சென்றார். அப்போது சீகூர் வனபகுதி வழியாக சிறியூரில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் நின்றிருந்த ஒற்றை காட்டுயானை அவர்கள் சென்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் நின்றது. சிறிது நேரம் சாலையின் குறுக்கே நின்ற அந்த யானை பின்னர் மெதுவாக அந்த சாலையிலேயே மெதுவாக நடந்து சென்றது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் அந்த யானையை பின் தொடர்ந்து சென்றன. சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்ற அந்த யானை பின்னர் வாகனங்களுக்கு வழிவிட்டு ஓரமாக சென்றது. அதனையடுத்து மாவட்ட ஆட்சிதலைவர் உள்ளிட்ட அனைவரும் சிறியூர் வாக்குசாவடிக்கு சென்று வாக்கு பதிவை ஆய்வு செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் மாவட்ட ஆட்சியர் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.