கடலூர் அடுத்த சூரப்ப நாயக்கர் சாவடியை சேர்ந்தவர் ஜெயபால் சாந்தி. இவருடைய மகள் நித்யாவுக்கும், நெய்வேலியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு விஜய் தண்டபாணி (1) என்ற மகனும், இரண்டு மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இதில், குழந்தை விஜய் தண்டபாணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகனின் நிலைமையை கண்டு, நித்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜன-12), தாய் வீட்டிலிருந்த நித்யா, இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மகனின் நிலையைக் கண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.