நாடு முழுவதும் இன்று 71ஆவது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடிவரும் வேளையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் தேசியக்கொடி பறக்கவிட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மேலும், கடலூர் மாவட்டம் பள்ளிவாசல்களில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மத பாகுபாடு இல்லாமல் தேச ஒற்றுமையை பறைசாற்றும்விதத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து தேசியக்கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மஞ்சக்குப்பம், சாவடி, புதுநகர், முதுநகர் என பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என அனைவரும் மத பாகுபாடின்றி ஒருங்கிணைந்து குடியரசு நாளை சிறப்பாகக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: ‘அவரு எதுக்குமே சரிபட்டு வரமாட்டாரு’ - ஸ்டாலினை கலாய்த்த ஓபிஎஸ்