கடலூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக கொண்டாடப்படாமல் இருக்கும் கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று நடத்தக்கோரி தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான கௌதமன் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடலூர் கடற்கரையில் பல ஆண்டுகளாக மக்கள் கூடி கோடை விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த விழா நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று நடத்தி கொடுக்குமாறு மனு அளித்தோம். அதற்கு மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை அமைச்சருடன் பேசி அதற்கான அரசு நிதி ஒதுக்கி கோடை விழா நடத்த ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன்.
எக்காரணம் கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இம்மண்ணில் வந்துவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறோம். ஒருவேளை இந்த மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். ஜல்லிக்கட்டை போல் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இந்த மண்ணை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தோல்வியை பரிசாக அளிப்போம்", என்றார்.