ETV Bharat / state

சாலை விபத்துக்கு காரணமாக இருந்த பழக்கடைகள் அகற்றம்

கடலூர்: இருசக்கர வாகன விபத்தின் எதிரொலியாக கடலூர் - சிதம்பரம் செல்லும் சாலையில் இருந்த பழக்கடைகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

சாலை விபத்துக்கு காரணமாக இருந்த பழக் கடைகள் அகற்றல்

author img

By

Published : Jun 3, 2020, 12:20 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடலூரில் நேற்று பேருந்து சேவை தொடங்கியது. கடலூர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காய்கறிச்சந்தை கடலூர் - சிதம்பரம் செல்லும் சாலையில் மாற்றியமைக்கப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சித்திரப்பாவை என்ற பெண்ணும் அவரது மகன் சுஜித்தும் வந்துகொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் சிக்கிய தாயையும் மகனையும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மீட்டு வட்டாட்சியர் செல்வக்குமாரின் காரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இந்த விபத்துக்கு காரணம் சாலையோரமாக இருந்த பழக்கடைகள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு அப்பகுதியில் உள்ள பழக்கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்படி நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி தலைமையில், நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பழக்கடைகளை அப்புறப்படுத்தினர்.

cuddalore fruit shops sequestrated in roads
அகற்றப்பட்ட பழக்கடைகள்

இதையும் படிங்க: கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.