கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மண்டல் ஆணைய பரிந்துரையின்படி மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டும், 2009 மீன்பிடித் தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம், 2019 மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மீன்பிடி படகு மற்றும் வலையுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவ கிராம தலைவர்கள் பஞ்சாயத்தார்கள் அமைப்பு நிர்வாகிகள், விசைப்படகு உரிமையாளர்கள், மீன் வியாபாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க...'என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்' -நிர்பயா குற்றவாளி உருக்கம்