17ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறை படி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றுடன் தேர்தல் நடத்தை விதிமுறை ரத்து செய்யப்பட்டதையடுத்து, இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார்.
மேலும், கூட்டத்தில் குடும்ப அட்டை முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.