கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே சின்னபொங்கனேரி கிராமத்தில் இரை தேடி முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், முதலையை மீட்டு சிதம்பரம் வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.
ஊரடங்கு காரணமாக ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதால், முதலை கொள்ளிடம் ஆற்றுப் பகுதி வழியாக ஊருக்குள் புகுந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர அப்பகுதியில் உள்ள ஏரியில் முதலைகள் மூன்று இருப்பதாகவும், அவை அனைத்தையும், இதேபோல் வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலூரில் மேலும் 68 பேருக்கு கரோனா!