கடலூரில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று பங்கேற்று திரும்பியவர்களின் 13 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் டெல்லி சென்று திரும்பியவரின் உறவினருடைய 3 வயது பெண் குழந்தைக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது, இவருடைய கணவரும் சமய மாநாட்டில் பங்கேற்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து அப்பெண்ணை கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இருக்கும் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி!