கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி பேருந்து நிலையத்தில் சட்ட விரோத ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டியும், வியாபரிகளிடமிருந்து ரவுடிகள் மாமூல் வசூலிப்பதை ஒழிக்கவேண்டியும், சிறு வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு உரிய இடத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கருப்புக் கொடி ஏந்தியபடி நேற்று போராட்டம் நடைபெற்றது.
இதற்கு, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:
காந்தி மார்கெட்டை அழிக்கக்கூடாது - அரசுக்கு வியாபாரிகள் வேண்டுகோள்!