கடலூர்: அருங்குணம் குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கரையோரம் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழத்தில் சிக்கி ஏழு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு முடிந்து நேற்று சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில் கிராமத்தில் ஒரே இடத்தில் 5 பேரின் உடல்களையும் வைக்கப்பட்டு இருந்தன. கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாலை 4 மணிக்கு குச்சிப்பாளையம் கிராமத்தில் இருந்து சுமிதா, நவநீதா, பிரியா, மோனிகா, சங்கீதா ஆகிய ஐந்து பேரின் உடல்களையும் ஊர்வலமாக ஊரில் இருந்து கொண்டு சென்று கெடிலம் நதிக்கரையில் பொதுமக்கள் நல்லடக்கம் செய்தனர்.
இதில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி சென்றனர். ஐந்து பேரின் உடலைக் கண்டு கிராம மக்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரியதர்ஷினி, காவியா ஆகிய இருவரின் உடல்கள் குறிஞ்சிப்பாடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு