ETV Bharat / state

மீனவப் படகிற்கு தீ வைத்த கும்பல்: பதற்றத்தால் காவலர்கள் குவிப்பு!

கடலூர்: பரங்கிப்பேட்டை மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு மீது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

boat-fire
author img

By

Published : Jul 29, 2019, 12:51 PM IST

Updated : Jul 29, 2019, 3:00 PM IST

தமிழ்நாடு முழுவதும் சுருக்கு வலை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு சில மீனவ கிராமங்களில் இன்னமும் சுருக்குவலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடுக்கடலில் மீனவர்கள் சுருக்குவலை பயன்படுத்துவதால் சிறு மீன்கள்கூட மாட்டிக்கொள்வதால் மீன்களின் இனப்பெருக்கம் தடைபட்டுள்ளது எனவும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது எனவும் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில், சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பரங்கிப்பேட்டையில் இன்று காலையிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பரங்கிப்பேட்டை கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுருக்குவலை படகின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டையில் தீப்பிடித்து எரிந்த படகு

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறாது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீ வைக்கப்பட்ட சுருக்குவலை படகின் மீது தண்ணீரை ஊற்றி காவல் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த நிலையில் தீ வைக்கப்பட்டது பிச்சாவரம் அடுத்த எம்ஜிஆர் திட்டு பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு என்பதால் இரு மீனவ கிராமத்திற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் இரு கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தீ வைத்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Intro:கடலூர் மாவட்டத்தில் சுருக்குவலையிணை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று பரங்கிப்பேட்டை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுருக்குவலை படகு மீது மர்ம நபர்கள் தீ வைப்பு போலீசார் குவிப்பு பதற்றம் பரபரப்புBody:கடலூர்
ஜூலை 29,

தமிழ்நாடு முழுவதும் சுருக்கு வலை பயன்படுத்த அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 64 மீனவ கிராமத்தில் ஒரு சில மீனவ கிராமத்தில் சுருக்குவலை இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது இதனால் நடுக்கடலில் மீனவர்கள் சுருக்குவலை பயன்படுவதால் சுருக்கு வலையில் சிறு மீன்கள் கூட மாற்றிக் கொள்வதால் மீன்களின் இனப்பெருக்கம் தடைபட்டுள்ளது மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. என பரங்கிப்பேட்டை யைச் சேர்ந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இந்நிலையில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காலை முதல் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் துவங்கியுள்ள நிலையில் பரங்கிப்பேட்டை கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுருக்குவலை படகின் மீது மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர் இதனால் பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் தீ வைக்கப்பட்ட சுருக்குவலை படகின் மீது தண்ணீரை ஊற்றி போலீசார் தீயை அணைத்தனர் இந்த நிலையில் தீ வைக்கப்பட்டது பிச்சாவரம் அடுத்த எம்ஜிஆர் திட்டு பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு என்பதால் இரு மீனவ கிராமத்தில் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் இரு கிராமத்திலேயே போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறது தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Jul 29, 2019, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.