கடலூர்: புவனகிரி பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார். இவருக்கு நெள்ளி கொள்ளை பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண் ரூபாய் 5 லட்சம் வட்டிக்கு கொடுத்துள்ளார். இதை அடுத்து பணத்தை திரும்பி கொடுக்கும் பொழுது ரூபாய் 12 லட்சம் தர வேண்டும் எனவும்; இல்லையெனில் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு சம்மதிக்க மறுத்து செல்வகுமார் மனமுடைந்து கடந்த ஒன்றாம் தேதி விஷமருந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று(ஜூன்07) உயிரிழந்தார்.
இதை அடுத்து செல்வகுமாரின் உறவினர்கள் அனிதாவின் மீது புகார் கொடுத்ததை அடுத்து, காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் காவலர் தற்கொலைக்கு காரணமான அனிதாவை புவனகிரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![ஆயுதபடை காவலர் தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15498587_sui.png)
இதையும் படிங்க:கந்துவட்டி கொடுமை: சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சுகாதார பெண் ஊழியர்!