கடலூர்: தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குநருமான கௌதமன் நேற்று முன்தினம் (நவ.24) கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை தீட்சிதர்கள் சிதைத்து சின்னாபின்னமாக்கியதாகவும்,
உடனடியாக தமிழ்நாடு அரசு இந்து கோயில்களைக் கைப்பற்றிவிட வேண்டும் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
![Hall under the Chidambaram Temple](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-cdm-natrajar-temple-01-10047_26112021195205_2611f_1637936525_407.jpg)
மேலும் அங்கு பழம்பெரும் பொருட்கள், பொக்கிஷங்கள் பஞ்சலோக சிலைகள் உட்பட விலைமதிப்புள்ள பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் இதனை தீட்சிதர்கள் மறைத்ததாகவும் தற்போது சமூக வலைதளங்களில் புகைப்படமும் தகவலும் வெளிவந்திருக்கின்றன.
இந்தச் சம்பவம் தற்போது பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் மத்திய, மாநில அரசுகள், தொல்லியல் துறையும் அறநிலையத் துறையும் நேரடியாகத் தலையிட்டு கோயிலைக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.
இதுபற்றி தீட்சதர் ஒருவரிடம் கேட்டதற்கு கோயிலுக்கு அடியில், இதுபோன்று மண்டபங்கள் இருப்பது சகஜம் தான் என்றும்; விலைமதிப்புள்ள பொருட்கள் சிலைகள் இருந்ததா என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தார்
மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கேட்டதற்கு, இது சம்பந்தமாக விசாரணை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Pay and take shop: மதுரையில் நேர்மையை விதைக்கும் மளிகைக் கடைக்காரர்