கடலூர் காவலர் பயிற்சி பள்ளியில் 134 பெண் காவலர்களுக்கு காவலர் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்தனர். இதில், 10 பெண் பயிற்சி காவலர்கள், பயிற்சி அளித்த 4 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இவர்கள் அனைவரும் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். மற்ற 124 பயிற்சி பெண் காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்று 9 பெண் பயிற்சி காவலர்கள், பயிற்சி அளித்த காவலர்கள் நான்கு பேர் என 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்கள் அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த போது சக பயிற்சி காவலர்கள் வரிசையில் நின்று பேண்ட் வாத்தியங்கள் முழங்க அவர்களை மலர் தூவி வரவேற்றனர்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களுக்கு பூங்கொத்து, பழங்கள் கொடுத்து வரவேற்றார். மேலும் அனைவரும் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தி பயிற்சி மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க:முதியவரை கத்தியால் குத்திய இளைஞர்: காவல் நிலையத்தில் சரண்!