கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களால் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் ரமேஷ் என்பவரின் மகன் கோபி (12 ) கடந்த 19ஆம் தேதி முதல் காணாமல் போனதாக ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் ரமேஷின் வீட்டின் அருகே மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் கோபி பிணமாக மிதப்பதை அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து ஒரத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து கழிவு நீர் தொட்டியில் இருந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இச்சிறுவன் வலிப்பு நோய் பாதிக்கப்பட்டவன் என்பதால் அச்சமயம் வலிப்பு ஏற்பட்டு கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழந்திருக்க கூடும் என தெரியவருகிறது சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ரூ.45 லட்சம் மதிப்பில் கழிவுநீர் அகற்றும் ரோபோக்கள் வழங்கிய ஓஎன்ஜிசி