ETV Bharat / state

இன்ஸ்டாகிராமில் வீடியோ.. நீங்க இங்க எப்படியோ, எங்க ஊர்ல நாங்க.... - youngsters make instagram video in pollachi police station

பொள்ளாச்சியில் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வரும் இரு சிறுவர்களின் சினிமா பாணி வீடியோ இணையதளத்தில் வைராகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் வீடியோ.. நீங்க இங்க எப்படியோ, எங்க ஊர்ல நாங்க....

author img

By

Published : Jan 11, 2022, 8:01 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திலிருந்து வெளியே வரும் இரண்டு சிறுவர்கள் நீங்க இங்க எப்படியோ எங்க ஊர்ல நாங்க, தெரியல்லன்னா இரண்டு பேருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்ற சினிமா பட வசனத்துடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ வைரலானதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சிறுவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரித்து வந்தனர். இருவரும் கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் உதவி ஆய்வாளர் திருமலைசாமி இருவரும் சிறுவர்கள் வீட்டுக்கு நேரில் சென்று படிக்கும் வயதில் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பெற்றோர் முன்னிலையில் அறிவுரை வழங்கினர்.

இன்ஸ்டாகிராமில்  மன்னிப்பு கேட்ட வீடியோ
சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்கும் வகையில் நடந்து கொள்வோம்

மேலும், இருவரும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்கும் வகையில் நடந்து கொள்வோம் என்று மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் பயண பாதுகாப்பு குறைபாடு: பயங்கரவாத சீக்கிய அமைப்பு பொறுப்பேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.