ETV Bharat / state

இரண்டரை மணிநேரம்... இடைவிடாமல் வீணை வாசித்து அசத்திய மங்கைகள்! - இரண்டரை மணிநேரம் இடைவிடாமல் விணை வாசித்து அசத்திய மங்கைகள்

கோவை: பொள்ளச்சி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில்  நவராத்திரி விழாவை முன்னிட்டு 50 பெண்கள் சேர்ந்து இடைவிடாமல் இரண்டரை மணி நேரம் வீணை வாசித்து அசத்தியுள்ளனர்.

veena
author img

By

Published : Oct 7, 2019, 2:20 PM IST

புரட்டாசி மாதத்தில் இருக்கும் விரதங்களில் ஒன்று நவராத்திரி விரதம். மொத்தம் ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்கைக்கும் அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்கும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் என்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளச்சியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.

இதில் தமிழ்நாடு ஆர்ய வைசியா மகா சபை கிளை சார்பாக, கோவை சஹானா குழுவைச் சேர்ந்த 50 பெண்கள் சேர்ந்து இடைவிடாமல் இரண்டரை மணி நேரம் வீணை வாசித்து இசை கச்சேரி நடத்தினர். குறிப்பாக துணியை கண்களில் கட்டி 'ரகுபதி ராகவ ராஜராம்' பாடலை வீணையில் வாசித்து அசத்தினர். மேலும் நிகழ்ச்சியில் முருகன், சரஸ்வதி, துர்க்கையம்மன் பாடல்களை வீணையில் இசைத்தனர்.

இரண்டரை மணிநேரம் விணை வாசித்து அசத்திய பெண்கள்

இது குறித்து விழாக் குழுவினர் கூறுகையில், 'தற்போது உள்ள தலைமுறையில் பல கலைகள் அழிந்துபோகும் சூழ்நிலை உருவாகிவருகிறது. கலைகள் அழியாமலிருக்க இம்மாதிரியான வீணை, இசை கச்சேரி நடத்தி பொதுமக்களிடம் கொண்டுசெல்கிறோம்' என்றார்.

இதையும் படிங்க: துர்கா பூஜையில் ’விங் கமாண்டர்’ அபிநந்தன் உருவச்சிலை!

Intro:Kovil functionBody:kovil functionConclusion:பொள்ளாச்சியில் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 50 பெண்கள் இசைத்த வீணை கச்சேரி. பொள்ளாச்சி- 7 பொள்ளாச்சியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த ஐந்து வருடமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர், இதையடுத்து தமிழ்நாடு ஆர்ய வைசியா மகா சபை கிளை சார்பாக கோவை சஹானா குழுவினர் இரண்டரை மணி நேரம் 50 பெண்கள் ஒரே நேரத்தில் வீணை வைத்து இசை கச்சேரி நடத்தினர், குறிப்பாக கண்களை துணியால் கட்டி கொண்டு ரகுபதி ராகராஜ ராம் பாடலை வீணையில் வாசித்து அசத்தினர் மேலும் முருகன், சரஸ்வதி, துர்க்கையம்மன் பாடல்களை வீணையில் இசைத்தனர், விழா குழுவினர் கூறும்போது இன்று பல கலைகள் வரும் தலைமுறைக்கு தெரியாமல் அழித்து போகும் சூல்நிலைஉள்ளது, கலைகள் அழியாமல் இருக்க இம்மாதிரியான வீணை இசை கச்சேரி நடத்தி பொதுமக்கள் பார்க்கும் வண்ணமாக உள்ளது என தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.