கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள போளுவாம்பட்டி வனச்சரகத்தில் யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளன. இந்த மலைப் பகுதியிலிருந்து அவ்வப்போது உணவு தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கை.
இந்நிலையில், சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று மாலை வந்த ஒற்றை ஆண் யானை இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதை அங்கிருந்த ஊழியர்கள் அலைபேசியில் படம்பிடித்துள்ளனர். பின்னர் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானையை விரட்டினர்.
இந்த யானை அப்பகுதியில் தொடர்ந்து சுற்றி வருவதாகவும், அங்கு உள்ள யானைகள் முகாமில் புகுந்து கும்கி யானைகளை அவ்வப்போது தாக்கி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே, உடனடியாக வனத்துறையினர் இந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸை விரட்டிய காட்டு யானை