கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் பணியாற்றி வருபவர் பவன்குமார். இவர் ராஜஸ்தானைச் சேர்ந்த சாக்ஷி என்ற பெண்ணை திருமணம் செய்து சூலூர் விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து விமானப்படை காவல் நிலையத்தில் சாக்ஷி புகார் அளித்ததின் பேரில் இருவரையும் சமாதானம் செய்த அலுவலர்கள், சொந்த ஊருக்குச் சென்று இரு வீட்டாரும் பேசி சமாதானம் செய்து வரவேண்டும் என்று அனுப்பி வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய மனைவி:
ராஜஸ்தானுக்குப் போவதற்கு முன்பாக இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்படவே, பவன்குமார் பாதி வழியில் தன் மனைவியை இறக்கி விட்டுச் சென்றுள்ளார். மேலும், தனது செல்ஃபோனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
இதனையடுத்து சாக்ஷி மீண்டும் விமானப்படை குடியிருப்புக்கு வந்தபோது அவரை விமானப்படை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக விமானப்படை தளத்துக்கு முன்பாக அவர் தனது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வெகுநேரத்திற்குப் பிறகு அங்கு வந்த விமானப்படை அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: திருமணம் செய்து ஏமாற்றிய போலீஸ் கணவர்! - மனைவி தர்ணா!